முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்ஷ இன்று பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சிறிலிய அமைப்பிற்கு சொந்தமான டிபெண்டர் ரக வாகனம் வஸீம் தாஜுதீனின் படுகொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை செய்யப்பட உள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை நாளை (16) பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர கூறியுள்ளார்.
வஸீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அவரிடமும் விசாரணை செய்யப்பட உள்ளதால், யோஷித ராஜபக்ஷவுக்கு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

