ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

399 0

201608121026455663_32-Tamils-arrested-in-Andhra-Pradesh-bail-dismissed_SECVPFஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்கள் ஜாமீன் மனுவை திருப்பதி 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது செம்மரக்கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து திருப்பதி ஜெயிலில் அடைத்தனர்.
கைதானவர்கள் வேலூர், திருவண்ணாமலை, சென்னையை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது ஜாமீன் கிடைக்காத வகையில் 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் கைதான 32 தமிழர்களை ஜாமீனில் எடுப்பதற்கு தேவையான சட்ட உதவிகளை செய்வதற்காக தமிழக அரசின் சிறப்பு வக்கீல்கள் முகமது ரியாஸ் மற்றும் அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள், 32 தமிழர்கள் சார்பில் ஜாமீன் கேட்டு திருப்பதி 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் கடந்த 8-ந் தேதி மனுத்தாக்கல் செய்தனர். ஜாமீன் மனு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர மாநில வனத்துறை சட்ட பிரிவுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு மே 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 32 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டு ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, தமிழக அரசின் வக்கீல்கள் சித்தூர் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கான சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசின் ஆலோசனை படி வக்கீல்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திர மாநில வனத்துறை சட்டத்தில் சமீபத்தில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டன. அதன்படி, செம்மரம் கடத்துவோர் மீது தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. செம்மர கடத்தலில் சிக்குபவர்கள் மீது உடனடியாக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்.

தொடர்ந்து செம்மர வழக்குகள் பாயும் பட்சத்தில் குற்றவாளிக்கு ரூ.10 லட்சம் அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். முதற்கட்டமாக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்படும் என ஆந்திர அரசின் வனப்பிரிவு சட்டத்தில் புதிதாக திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.