கவர்ச்சி கதாநாயகனாக சித்தரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை

307 0

201608121002204803_Didn-t-want-to-be-made-into-hero-M-S-Dhoni-on-his-biopic_SECVPFகவர்ச்சியான கதாநாயகனாக சித்தரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை எனது வளர்ச்சிக்கு பின்னால் இருந்த நிஜவாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில்தான் எனது வாழ்க்கையை தழுவி எடுத்துள்ள திரைப்படம் அமைய வேண்டும் என நான் விரும்பினேன் என கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் பிரபலமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘எம்.எஸ். தோனி: சொல்லப்படாத கதை’ (M S Dhoni: The Untold Story) என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகியுள்ளது.

நிரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் சுஷந்த் சிங் ராஜ்புத் என்பவரும் தோனியின் மனைவி சாக்‌ஷியின் கதாபாத்திரத்தில் கியாரா அத்வானியும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தோனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தப் படத்தை உருவாக்கியவர்கள் கவர்ச்சியான கதாநாயகனாக என்னை சித்தரிப்பதை நான் விரும்பவில்லை. அதற்கு மாறாக, இந்த பயணத்தில் நான் பட்ட கஷ்டங்களையும் அதன்பிறகு அடைந்த முன்னேற்றத்தையும் மையப்படுத்துவதாக இந்தப் படம் அமைய வேண்டும் என விரும்பினேன்.

கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்பதற்கு முன்னர் கால்பந்து விளையாடினேன். ரெயில்வே கால்பந்து அணிக்காக விளையாடி இருக்கிறேன். அதன்பிறகு என்னை கிரிக்கெட் உலகுக்குள் தள்ளியது எது? அந்த பயணம் எப்படி இருந்தது? என்பது மட்டுமே இந்தப் படத்தின் மையக்கருவாக காட்டப்பட வேண்டும் என கருதினேன்.

ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து நம் நாட்டுக்காக விளையாடுவேன் என்று நான் நினைத்துகூட பார்த்தது கிடையாது. சாதனைகள் என்பதுபற்றி எல்லாம் சிந்தித்தும் இல்லை. பள்ளிகளிலோ, பூங்காக்களிலோ கிரிக்கெட் ஆடியபோது எங்கள் அணி ஜெயிக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணினோம்.

கடந்தகாலம் தந்த படிப்பினைகளை வைத்து நிகழ்காலத்தில் வாழ்ந்து, எதிர்காலத்துக்கான இலக்குகளுடன் முன்நோக்கி செல்வதுதான் எனது தாரக மந்திரமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.