தமிழக ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட திராவிட கட்சிகள் தவறிவிட்டுன – அன்புமணி ராமதாஸ்

211 0
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி பா.ம.க. சார்பில் வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வாகன பேரணி கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார்.
இதன்போது உரையாற்றிய அவர், அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது கடந்த 1962ஆம் ஆண்டு காமராஜர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஆகும்.
அப்போது இந்த திட்டத்துக்கு மேல் பவானி திட்டம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது உபரிநீரை சேமிக்கும் திட்டம் ஆகும்.
தமிழக ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட திராவிட கட்சிகள் தவறியதால் ஆண்டு ஒன்றுக்கு ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது.
தமிழ்நாட்டில் 33 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டினாலே தமிழக தண்ணீர் பிரச்சனை தீர்ந்து விடும்.
இந்த திட்டங்களை நிறைவேற்ற 40 ஆயிரம் கோடி போதும். விவசாயிகள் வாழ்வு மலர்ச்சி அடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment