6 சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

214 0
இந்திய நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 25ஆம் திகதி பதவி ஏற்றார்.
அதில் இருந்து இதுவரையில் அவர் 6 முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த 6 மசோதாக்களும் அண்டையில் நாடாளுமன்றில் ஒப்புதலை பெற்றவை ஆகும்.
அவை, கடற்படை அதிகார எல்லை மற்றும் கடல் சார் உரிமை கோரிக்கை தீர்வு சட்ட மசோதா-2017, இலவசம் மற்றும் கட்டாய கல்விக்கான குழந்தைகள் உரிமை (திருத்தம்) சட்ட மசோதா, புள்ளி விவரங்கள் சேகரிப்பு (திருத்தம்) சட்ட மசோதா, இந்திய தகவல் தொழில் நுட்ப கல்வி நிறுவன (பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன்) மசோதா, தேசிய தொழில் நுட்பம், அறிவியல் கல்வி, ஆராய்ச்சி (திருத்தம்) சட்ட மசோதா, காலணி வடிவமைப்பு, அபிவிருத்தி கல்வி நிறுவன சட்ட மசோதா ஆகும்.

Leave a comment