நவாஸ் ஷெரீப் தொகுதியில் களமிறங்கும் ஹபீஸ் சையது கட்சி

319 0
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது ஆரம்பித்துள்ள கட்சி போட்டியிடுகிறது.
பனாமா கேட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் வெற்றி பெற்ற லாகூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றிடமானது.
இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி போட்டியிடுவார் என கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது ஆரம்பித்துள்ள புதிய அரசியல் கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment