பூநகரி பிரதேசத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர் தேவை

231 0

மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர்  தேவைப்படுகிறது பூநகரி பிரதேசத்திற்கு- பிரதேச செயலாளர் தெரிவிப்பு

வறட்சியின் தாக்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டு இருக்கும் பாரிய பிரச்சனையாக காணப்படுவது குடிநீர்ப்பிரச்சனையாகும்.மாவட்டத்தின் பூநகரிப்பிரதேச செயாலாளர்பிரிவு இதில் அதிகளவில் பாதிப்பட்ட பிரதேச செயாலாளர் பிரிவு ஆகும்.
பூநகரிப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15க்கும் அதிகமான கிராமாங்கள் முற்றாக நீர் இன்றி காணப்படும் பிரதேசமாக உள்ளது இவ்வாறான நீர்ப் பிரச்சனை தீர்ப்பதற்கு மாவட்ட அனர்த் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பூநகரிப்பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து வறட்சியினால் பாதிக்கபட்ட 5604 குடும்பத்தில் 2160 குடும்பத்தினருக்கு மாத்திரம் தங்களால் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் 3144 குடும்பங்களுக்கான குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் உள்ளதாக அண்மையில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைமைச்செயலக துணைத்தலைவர் உள்ளிட்டு குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தின் வறட்சி நிலைமைகள் தொடர்பில்  நேரில் ஆராய்ந்து மக்களுக்கு உதவுவதற்கு பிரதேச செயலாளரை சந்தித்த போது பிரதேச செயலாளர் பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் தெரிவித்தார்
குறித்த சந்திப்பில் கிளிநொச்சி செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவர் வேழமாலிகிதன் செயலாளர் சேதுபதி பிரிவுத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் குறித்த செஞ்சிலுவைச்சங்க  தலைமைச்செயலக துணைத்தலைவர் உள்ளிட்ட குழுவினர் பூநகரிப்பிரதேசத்தின் கறுக்காய்த்தீவு மற்றும் ஞானிமடம் செட்டியகுறிச்சி போன்ற கிராம சேவையாளர் பிரிவுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

Leave a comment