மன்னாரில் கஞ்சாவுடன் 3 பேர் கைது

235 0

மன்னாரில் 30 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரும், கொழும்பு காவல்துறை விசேட செயலணியினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மன்னார் – எழுந்தூர் சந்திப் பகுதியில் அவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

விற்பனைக்காக கொண்டு சென்றபோதே குறித்த கேரள கஞ்சாவுடன் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகத்துக்குரியவர்களும் மன்னார் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலையடுத்து குறித்த கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருகோணமலை பாலையூற்று பிரதேசம் முருகன் கோயிலடியில் 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரும், அநுராதப்புர சந்தியில் ஆயிரத்து 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மற்றுமொருவர் மரத்தடி சந்தியில் வைத்து 250 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

ஆயிரத்து 450 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட குறித்த மூன்று பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

Leave a comment