போக்குவரத்து விதி மீறல் – அடுத்த வாரம் முதல் அமுல்

242 0

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா ஆக்க குறைந்தது அபாரதமாக விதிக்கப்படவுள்ளது.

சாரதி அனுமதிபத்திரமின்றி வாகனம் செலுத்துதல், போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட காப்;புறுதி இன்றி வாகனம செலுத்துதல், தொடரூந்து பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல் போன்ற குற்றங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளது.

அத்துடன், அதிவேகத்தில் வாகனத்தை செலுத்துதல், வயது குறைந்தோர் வாகனம் செலுத்துதல், இடதுபக்கம் முன்னோக்கி செல்லல் போன்ற குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட அபராத தொகை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a comment