யாழ் மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி இன்றுபாரிய ஆரப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வலிகிழக்கு பிரதேச சபையின் புத்தூர் அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றது. சமூக நீதிக்காக வெகுஜன அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆரப்பாட்டத்தில் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
யாழ் மாவட்டத்தில் பல இந்து மயானங்கள் குடியிருப்புக்களோடு அண்மித்ததாக காணப்படுவதால் தாம் சுகாதாரப்பிரச்சினை உட்பட மனரீதியாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவற்றை வேறு இடங்களுக்கு இடமாற்றக்கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் புதிய மாக்சிச ஜனனாயகக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் ஆகியோரும் ஆயிரரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்
முடிவில் பிரதேசசபையின் செயலாளருக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

