கனேமுல்ல மேம்பாலத்தின் வேலைகள் இவ்வருட இறுதியில் நிறைவு பெற்று, பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து பிரதேசங்களிலுமுள்ள மக்களின் அன்றாட வாழ்வை இலகுபடுத்தும் நோக்கில் ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த பாலத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பிரித்தானிய இரும்புப் பாலத் திட்டத்தில் நிரணிக்கப்படும் 504 மீட்டர் நீளமான குறித்த பாலத்திற்கு 1760 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
கணேமுல்ல நகரின் மத்திய பகுதியில் காணப்படும் புகையிரத பாதை காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாரிய அசவ்கரியங்கள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாகவே ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த வேலைத்திட்டத்தினை விரைவாக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

