இலங்கையின் எதிர்காலத்தையே மாற்றும் குப்பை-சம்பிக்க ரணவக்க

325 0

குப்பைகளின் மூலமாக மின்சாரத்தை பெரும் முதலாவது வேலைத்திட்டம் இலங்கையின் எதிர்காலத்தை மாற்றும் நகர்வாக அமையும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்க வேண்டிய ஒரு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படுகின்றது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

குப்பைகளின் மூலமாக மின்சாரத்தை பெரும் வேலைத்திட்டம் மிகப்பெரிய வெற்றியல்ல. ஆனாலும் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண இது மிகசிறந்த வேலைத்திட்டமாக கருதப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மேல்மாகாண குப்பைகளின் மூலமாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் இன்று கரதியானை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

Leave a comment