டோக்கியோவில் அருகே மிதமான நிலநடுக்கம்

14673 0

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ரிக்டர் 4.9 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனினும் சுனாமி எச்சரிக்கைகள் எதும் விடப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் அதிமான நிலநடுக்கங்கள் உணரப்படும் இடமாக உள்ள ஜப்பானில் 20 சதவிகித நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவாகின்றன.

இந்த நிலையில், தலைநகர் டோக்கியோவிலிருந்து கிழக்குப்பகுதியில் உள்ள சிபாவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கைகள் எதும் விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் வேறு எந்த அளவிலான பாதிப்புகளும் ஏற்படவில்லை என அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a comment