80 நாடுகளுக்கு இலவச விசா – கட்டார் அறிவிப்பு

484 0

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமீரேட்ஸ், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கட்டார் மீதான தூதரக உறவை கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி முறித்துக்கொண்டன.

தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதியுதவி செய்வதாகவும், எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி கட்டாருக்கு இந்த தடை விதிக்கப்பட்டது.

கட்டாரில் இருந்து இந்த நாடுகளின் தூதர்களும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலையில், அண்டை நாடுகளின் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளால் நெருக்கடிக்கு ஆளான கட்;டார், இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் கட்டார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கட்டார் சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பால் வளைகுடா நாடுகளில் கட்டார் மிகவும் திறந்த வெளி நாடாக திகழும்.

இந்த அறிவிப்பு உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

எனினும் அரபு நாடுகளில் லெபனான் மாத்திரம் இந்த 80 நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Leave a comment