கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய விசேட குழு 

308 0
கடந்த 2010 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடிகள் உள்ளிட்டவை தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்க வேண்டும் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா கோரிக்கை விடுத்தார்.
மஹிந்தவின் ஆட்சியில் மத்திய வங்கி ஆளுநராக இருந்த நிவாட் கப்ரால் மீது இவ்வாறு மோசடி வழக்கு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
எனவே தவறிழைத்தவர்கள் யாராகியிருந்தாலும் அவர்களை பிடித்து சிறையில் அடைக்குமாறும் பிரதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இன்றைய நாடாளுமன்ற விவாதங்களில் கலந்தக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்க பதவி விலகியதன் மூலம் நாட்டின் ஜனநாயக ஆட்சி வெளிப்பட்டுள்ளதாகவும்,கடந்த காலத்தில் இவ்வாறான நிலை காணப்படவில்லை என்றும் அமைச்சர் ஹர்ஸ குறிப்பிட்டார்.
அன்றைய ஆட்சியில் அமைச்சர் சரத் பொன்சேகா மிருபத்தைப் போல சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும்,ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதுவே அன்றைய ஜனநாயகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இன்றைய நல்லாட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாலேயே அமைச்சர்களிடமும் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா குறிப்பிட்டார்.

Leave a comment