இந்தியா வசமாகிறது மத்தல விமான நிலையம்

255 0

மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனம் ஒன்றுக்கு மத்தல விமான நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்சீனாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட மத்தல விமான நிலையத்தைஇந்திய நிறுவனத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் மத்தல விமான நிலையம் அமைந்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில்மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனம் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment