வட மாகாணசபையை கலைக்குமாறு தவராசா வேண்டுகோள்!

214 0
வினைத்திறன் அற்ற மாகாண சபையில் மேலும் ஓர் சர்ச்சையாக தமிழரசுக் கட்சியும் அமைச்சரவையில் இருந்து ஒதுங்குமாயின் சபையை கலைக்குமாறு முதலமைச்சர் பரிந்துரைக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா வேண்டுகோள் விடுத்தார்.
வட மாகாணத்தின் முதலாவது சபையானது மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் மக்களின் ஆணையுடன் உருவானது. ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்பிற்கும் தேவைக்கும் ஆற்றவேண்டிய பணியை செய்ய வட மாகாண சபை தவறிவிட்டது என்பதனை நான் பகிரங்கமாகவே குற்றம் சுமத்த முடியும் இந்த நிலையில் ஆளும் கட்சியில் 30பேரும் ஒத்திருந்ந காலத்திலேயே சாதிக்கமுடியாது கையாலாகத நிலையில் உள்ள  இந்த வடமாகாண முதலமைச்சர் உடனடியாக ஓர் கௌரமான முடிவினை மேற்கொள்ள வேண்டும்.
அது கௌரவமான முடிவெனில் நிச்சயமாக இன்றைய சூழலில் அது மாகாண சபையை கலைப்பது ஒன்றின் மூலம் மட்டும்தான் ஏற்படுத்த முடியும் ஏனெனில் மக்களிற்கு எதுவுமே செய்யாது வெறுமனே பெரும்தொகை நிதி உறுப்பினர்களதும் அமைச்சர்களதும் சம்பளம் நிர்வாகச் செலவு , அலுவலக வாடகை , வாகனச் செலவு எனச் செலவு செய்து மேடை நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்காக மக்கள் தேர்வு செய்யவில்லை.
இந்த வடமாகாண சபையின் சட்டத்திற்கு உட்பட்டு பல நியதிச் சட்டங்களை உருவாக்கி ஆயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்பை வழங்கியிருக்கலாம் , அத்துடன் புலம்பெயர் மக்களை முதலமைச்சர் அணுகி அழைத்துவந்து பாரிய முதலீடுகளைச் செய்வித்து இளைஞர் யுவதிகளில் பல ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பினையும் போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிரந்தர உதவிகளையும் முதலமைச்சரால் ஏற்படுத்தியிருக்க முடியும் .
அவ்வாறு எதனையும் செய்யாது இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு தற்போது உள்ளதையும் இழந்து நிற்கின்றனர். எனவே மக்களே நீதிபதிகளாகட்டும் அந்த வகையில் உடன் மாகாண சபையை கலைத்து விட்டு அதன் பின்னர் வரும் தேர்தலை எதிர்கொண்டு மக்களின் ஆணையைப் பெற்று தமது நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும். என்றார்-

Leave a comment