அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக உதவியாளர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மையானது அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சில ஊடகங்களில் அடிப்படைக்கு புறம்பான செய்திகள் வௌியாகியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் நேற்று முன்தினம் பொலிஸ் விசேட படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வௌியாகியிருந்தன.
இந்த தகவல்களை முன்னிலைப்படுத்தி அமைச்சருக்கு எதிராக சில ஊடகங்கள் சேறு பூசும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

