3 லட்சம் கோடி நஷ்டஈடு தர தயார் – இங்கிலாந்து அறிவிப்பு 

284 0

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் விருப்பம் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அறிவித்தார்.

அதற்கான காலகெடு முடிவடையும் நிலையில் உள்ளது.
எனவே, அது குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவதால் பல லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, இங்கிலாந்து 8 லட்சம் கோடி 118 பில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

எனினும் அவ்வளவு பெரிய தொகையை தர முடியாது என இங்கிலாந்து மறுத்து வந்த நிலையில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக 3 லட்சம் கோடி நஷ்டஈடு தர தயார் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

அதை 3 தவணையாக வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது

Leave a comment