கதிர்காமத்தில் விபத்து – கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் பலி 

242 0

கதிர்மாக யாத்திரைக்குச் சென்ற கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

காதிர்காமத்தில் நேற்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அவர்கள் சென்ற பேருந்தின் பின்புறமாக உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அதனை கவனிக்காத சாரதி, பேருந்தை பின்புறம் நோக்கி செலுத்த அதன் சில்லில் சிக்கிய மூவர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களின் இருவர் உயிரிழந்தனர்.

மற்றுமொருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 18 வயதான வெல்சன் விது மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 41 வயதான அசன் கரண் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்தனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Leave a comment