வட கொரியா மீண்டும் எச்சரிக்கை

402 0
வடகொரியாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடையினை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக மேற்கொண்ட அமெரிக்காவிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட கொரியா எச்சரித்துள்ளது.
வட கொரியாவின் இறையாண்மைக்கு பங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அமெரிக்காவிற்கு தகுந்த பாடம் புகட்டப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார தடையின் மூலம் அணு ஆயுத திட்டம் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் திட்டமிட்டது போல முன்னெடுக்கப்படும் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்து தென் கொரியாவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை வடகொரியா முற்றாக நிராகரித்துள்ளது.
வட கொரியாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
புதிய பொருளாதார தடை மூலம் வடகொரியாவின் ஏற்றுமதி துறை பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment