ஈராக்கில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ். ராணுவ மந்திரியின் மகன் பலி

237 0

ஹம்ரீன் மலைப்பிரதேசத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஈராக் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உமர் அல் சிச்சானியின் மகன் கொல்லப்பட்டு விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில், ராணுவ மந்திரியாக இருந்தவர் உமர் அல் சிச்சானி. இவர் கடந்த ஆண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்.

இந்த நிலையில் அங்கு சலாகுதீன் மாகாணத்தில் ஹம்ரீன் மலைப்பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஈராக் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் உமர் அல் சிச்சானியின் மகன் கொல்லப்பட்டு விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “நினிவேயில் படையெடுக்கும் பிரிவை தலைமை தாங்கி நடத்தி வந்த சிச்சானியின் மகன், கொல்லப்பட்டு விட்டார். அவர் பலியாகிவிட்டது குறித்த தகவலை ஐ.எஸ். அமைப்பினர் ரகசியமாக வைத்துள்ளனர். அவர் கொல்லப்பட்டு விட்ட நிலையில் ஹாவிஜாவில் உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தன.

சிச்சானியின் மகன் கொல்லப்பட்டிருப்பது, ஐ.எஸ். அமைப்புக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a comment