ரஷியா: போலீசார் துப்பாக்கியை பறித்த மூன்று கைதிகள் கோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை

207 0

ரஷியாவில் போலீசார் துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்ற மூன்று கைதிகள் கோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஐந்து கைதிகளை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பிராந்திய கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு சென்றனர். கைதிகளுக்கு பாதுகாப்பாக துப்பாக்கியுடன் இரண்டு போலீசார் சென்றனர்.

கோர்ட்டில் உள்ள லிப்ட் மூலம் மாடிக்குச் சென்றனர். லிப்ட் 3-வது மாடியில் நின்றபோது, போலீசாரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு கைதிகள் தப்பிக்க முயன்றனர். அப்போது தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று சட்ட அமலாக்க அதிகாரிகள் காயம் அடைந்தனர். அதில் ஒருவர் துப்பாக்கி குண்டால் தாக்கப்பட்டார். மூன்றில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த ஐந்து பேர் கார் உரிமையாளர்களை கொலை செய்து காரை திருடுதல் மற்றும் 17 கொலை வழக்குகளில் தொடர்புடையர்வகள் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a comment