இலங்கையின் வடக்கில் நிலவும் மோசமான நிலைமை கட்டுப்படுத்துவதற்காக நேர்மையான மற்றும் வினைத்திறன் மிக்க காவல்துறையினர் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தப் பணிகளுக்காக முப்படையினரை பயன்படுத்தும் நடவடிக்கையை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.
Audio Player