இலங்கையின் டெங்கு தாக்கம் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

333 0

இலங்கையில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மரண வீதமும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதன்படி, டெங்கு நோயினால் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதில் 327 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் ஒரு லட்சத்துக்கு 15 ஆயிரத்து 605 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் தமது கட்டிடச் சூழலைப் பேணிய 798 நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு தொற்றுநோய்த் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அதேநேரம் அண்மையில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட  ஒருலட்சத்து 5 ஆயிரத்து 486 கட்டிடங்களில், 3 ஆயிரத்து 655 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு டெங்கு நோய் பரவல் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment