காணி விடுவிப்பு  குறித்து பிரித்தானியா வரவேற்பு

2227 0

இலங்கையில் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை படையினர் விடுவித்து வருகின்றமை குறித்து பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

எனினும் சமூகங்களுக்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள மேலும் பல காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றிய அவர் காணிகளை மீள அளிக்கும் நடவடிக்கையில் சில கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும்.

எனினும் இந்த காணி விடுவிப்பானது வடக்கில் பணியாற்றும்  படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நல்லுறவை வலுப்படுத்தும்.

தற்போது நடப்பவை சிறப்பாக நடைபெறுகின்றன.

தொடர்ந்தும் இதைவிட சிறப்பான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என டோரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படைக்கள உறவுகள் மேம்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போருக்கு பின்னரான நல்விணக்கம் தொடர்பில் பிருத்தானியாவை பொறுத்தவரை அது வட அயர்லாந்தின் சொந்த அனுபங்களை கொண்டிருக்கின்றது.

உண்மை, பொறுப்புக்கூறல், தேசிய நலன், படைகள் தொடர்பான அக்கறை மற்றும் படையின் நவீனத்துவம் என்பன இதன்போது முக்கியத்துவம் பெறுவதாக டோரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாதம், தீவிரவாதம், இணையத்தள அச்சுறுத்தல்கள் தொடர்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment