மொஸ்கோ நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

6099 0
ரஷ்யாவின் மொஸ்கோ நகரின் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கைவிலங்கு போடப்பட்டிருந்த கைதியொருவர் கைவிலங்களால் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரியின் கழுத்தை நெரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பிரிவால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரியின் கழுத்தை நெரித்த வண்ணம் தப்பிச்சென்ற கைதிகள் குறித்த அதிகாரியின் துப்பாக்கியை பறித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர் , மற்றைய அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் , இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment