இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை அவதூறு செய்யும் வகையிலான பாடநூல்

28499 87

மகாரஷ்ரா மாநிலத்தின் பாடசாலை பாடநூல்களிலிருந்து முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரை அவதூறு செய்யும் வகையிலான பாடங்களை அகற்ற இணங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ரா மாநிலத்தின் கல்வியமைச்சர் வினோத் டவுடே இதனை சட்டசபையில் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விடயத்தில் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் தோல்வியடைந்ததாக கூறப்படும் அம்சங்கள் மகாராஷ்ரா மாநிலத்தின் 9 ஆம் தர பாடநூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை வரலாற்றை திரிவுப்படுத்தும் தகவல்களாகும்.

அத்துடன் இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்த இரண்டு பிரதமர்களுக்கு அவதூறை ஏற்படுத்தும் செயலாகும் என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

Leave a comment