மக்கள் எந்த கருத்தையும் வெளியிடுவதற்கு தற்போது சுதந்திரம் – ஜனாதிபதி

233 0
மக்கள் எந்த ஒரு கருத்தையும் வெளியிடுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதோடு எத்தகைய இடையூறுகள் ஏற்பட்டாலும் அபிவிருத்தி பணிகள் முன்னோக்கிக் கொண்டுச் செல்லப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரச்சினைகளும் சவால்களும் நிறைந்த கடந்த ஆட்சியை நிறைவுக்கு கொண்டுவந்து மக்களுக்கு சுதந்திரமாக சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
ஊடகங்களுக்கு வழங்க முடிந்த உச்ச அந்தஸ்தை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற சமநிலையற்ற அபிவிருத்தியை முடிவுக்குக் கொண்டுவந்து முழு தேசத்தையும் கட்டியெழுப்பும் நேர்த்தியான அபிவிருத்தி திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதகாவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Leave a comment