முரசொலி பவள விழா: பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம்

384 0

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவள விழாவிற்கு தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடி கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவள விழாவிற்கு தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடி கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவள விழா வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள இந்த விழா, பல்வேறு வகைகளில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த விழாவில், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் வாழ்த்துரை வழங்குவார்கள் என்று அழைப்பிதழில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் பெயரும் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.

இவர்கள் தவிர, தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர். ஏற்கனவே, விழாவில் பங்கேற்குமாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கும் ஸ்டாலின் ‌அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று, ஸ்டாலினுக்கு வைகோ கடிதம் எழுதியிருந்தார். இதனால், அவரது பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லை.

கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு அ.தி.மு.க அரசை விமர்சிப்பதாக அமைச்சர்கள் சிலர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், முரசொலி பவளவிழாவில் கமல்ஹாசன் பங்கேற்க இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. இந்த நிலையில் முரசொலி பவள விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ‌உள்ளிட்ட தலைவர்களும் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

Leave a comment