டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

1059 0

அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நகரமாக மான்ஹட்டனில் உள்ள வானுயர்ந்த கட்டிடங்களை குறிக்கும் விதமாக கடந்த 2005 ஆம் ஆண்டில் தொண்டு நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட ஏலம் ஒன்றிற்காக ஓவியம் டொனால்ட் டிரம்ப்பால் வரையப்பட்டது. எனினும், இந்த ஓவியத்தில் தனக்கு சொந்தமான ’டிரம்ப் டவர்’ கட்டிடத்தை முன்னிலைப்படுத்தி ஓவியத்தை டிரம்ப் வரைந்திருப்பார்.

இந்த ஓவியம் லாஸ் ஏஞ்சல்ஸை மையமாக கொண்டு இயங்கும் நேட் டி சாண்டர்ஸ் என்ற ஏல நிறுவனம் மூலம் தற்போது ஏலம் விடப்பட்டது. 9,000 அமெரிக்க டாலர்களில் தொடங்கிய இந்த ஓவியத்தின் ஏலம், இறுதியாக, 29,184 அமெரிக்க டாலர்களில் முடிவடைந்தது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18,73,175 ரூபாய் ஆகும்.

இதற்கு முன்னர் ஏற்கனவே, டிரம்ப் பயன்படுத்திய பெரராரி ரக சொகுசு கார், கோல்ப் கிளப்பின் ஒரு தொகுப்பு மற்றும் டிரம்ப் கையெழுத்திட்ட விஸ்கி பாட்டில் ஆகியவை ஏலம் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment