பயங்கரவாத திட்டம் த தடுக்கப்பட்டுள்ளது – பிரதமர் மல்கம் டேர்ன்புல்

23137 0

வாநூர்தி ஒன்றை தகர்க்கும் நடவடிக்கை என சந்தேகிக்கப்படும் பயங்கரவாத திட்டம் ஒன்றினை அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் தடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார்.

சிட்னியின் பல பகுதிகளில் நால்வர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சந்தேகநபர்களின் இருப்பிடங்களில் இருந்து வெடிமருந்துக்களை விசாரணையாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச மற்றும் உள்ளுர் வாநூர்தி தளங்களின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பை கொண்டிருக்கலாம் என அவுஸ்திரேலிய காவல்துறை ஆணையாளர் அன்ரு கொல்வின் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Leave a comment