14.08.2016 செஞ்சோலை படுகொலை நெஞ்சம் மறக்குமா- யேர்மனி தலைநகரத்தில் நினைவேந்தல்

14108 62

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவட்ட சம்பவம்.

தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 62 பிஞ்சுகளின் 11 ம் ஆண்டு நினைவாக யேர்மனியில் பேர்லின் நகரில் பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது.அனைவரும் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Leave a comment