அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் பதவியில் இருந்த ரெயின்ஸ் பிரேபஸை அதிபர் டிரம்ப் நீக்கியுள்ளார். அவரது இடத்தில் ஓய்வுபெற்ற ஜெனரல் ஜான் கெல்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து கடந்த ஆறுமாதமாக வெள்ளை மாளிகை தலைமை பணியாளராக ரெயின்ஸ் பிரேபஸ் பதவிவகித்து வந்தார்.
இந்நிலையில், ரெயின்ஸ் பிரேபஸ் வெள்ளை மாளிகையின் ரகசிய செய்திகளை ஊடகங்களிடம் வெளியிடு வருவதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள டிரம்பின் தகவல் தொடர்பு இயக்குனர் அந்தொனி ஸ்காரமுச்சி கடந்த வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, ரெயின்ஸ் பிரேபஸை வெள்ளை மாளிகையின் தலைமை பதவியாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அதிபர் டிரம்ப்
தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஓய்வுபெற்ற அமெரிக்க ஜெனரல் ஜான் கெல்லி வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

