10 நாட்களுக்குள் உங்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்று தருவேன்; கேப்பாபுலவு மக்களுக்கு சம்பந்தன் உறுதி

9237 0
முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு ஸ்ரீலங்கா இராணுவம் ஆறு மாத கால அவகாசத்தைக் கோரியுள்ள நிலையில் .10 நாட்களுக்குள் உங்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்று தருவேன் என கேப்பாபுலவு மக்களுக்கு  ,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.
 கேப்பாபுலவில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இன்றைய தினம் கொழும்பிலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் மக்களுக்கான சரியான தீர்வு எட்டப்படாத நிலையில் குறித்த மக்களுடன் கலந்துரையாடிய   தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் அழைப்பின் பேரில் இன்றைய தினம் கொழும்பிலுள்ள அவரது அமைச்சில் கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
மக்கள் ஆகக் கூடியது ஒருமாத காலத்தில் காணி விடுவிக்குமாறு கோரினர் இருப்பினும் இராணுவத்தரப்பு சரியான குறைந்த கால எல்லை வழங்கவில்லை இந்நிலையில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கும் போராட்டம் இன்று 150 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.தமக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் விடுவிக்கப்படும் வரை தமது நில மீட்புப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் கேப்பாபுலவு மக்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
 
இதனை தொடந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களிடம் மக்கள்   கலந்துரையாடினர் அர்களிடம் தான் ஜனாதிபதி பிரதமர் இராணுவ தளபதி பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் சந்திப்பொன்றை ஏற்ப்படுத்தி 10 நாட்களுக்குள் உங்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்று தருவேன் என கேப்பாபுலவு மக்களுக்கு  ,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்உறுதியளித்துள்ளார்.