நல்லூர் ஆலயத்திற்கான கொடிச்சீலை ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது

379 0
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில்  கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையினை ஆலயத்திற்கு எடுத்துவரும் மரபு ரீதியான நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ் கல்வியங்காடு செங்குந்தா மரபினரே நல்லூர் ஆலய உற்சவத்திற்கான கொடிச்சீலையை பரம்பரை பரம்பரையாக வழங்கிவருகின்றனர். இந்நிலையில் கொடிச்சீலையானது செங்குந்த மரபில் வந்த திரு.சிவஞானமுதலியார் அவர்களின் பேரன் அவர்களால் திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்தில் இருந்து  இன்று காலை 8.00 மணிக்கு மங்களவாத்தியங்கள் சகிதம் எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள திரு. வைரவநாதர் வல்லிபுரசாமி அவர்களால் அமைக்கபட்டுள்ள கொடித்தேர் மடத்தில் கோவில் கொண்டருளியிருக்கும் முருகப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று கொடிச்சீலை அடியார்கள் புடை சூழ சித்திரத்தேரில் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆலயபிரதான சிவாச்சாரியாரிடம் கையளிக்கப்பட்டது.

Leave a comment