பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்பவும்

6079 582

பணிப் புறக்கணிப்பு போராட்டததில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 

பெற்றோல் விநியோகத்தை அத்தியவசிய சேவையாக அறிவித்து நேற்று நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தற்போது அதனை அத்தியவசிய சேவையாக கருதி இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் பணிக்கு திரும்பாத ஊழியர்கள் தாமாகவே பணியில் இருந்து விலகியதாக கருதப்படுவர். அதன்படி அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் நேற்று முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டததில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment