சாவகச்சேரியில் குளவி கொட்டி 12 பேர் மருத்துவமனையில்

399 0
சாவகச்சேரி இலங்கை வங்கியின் மேல் மாடியில் இருந்த குளவிகள் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களை குத்தியதில், 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் மதியம் 2:50  மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் மட்டுவில் சரசாலை மீசாலை சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 12பேர் இலக்காகினர்.
இதில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக, சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a comment