பாதாள குழு உறுப்பினர் ஒருவர் கைது

331 0

கொள்ளை சம்பவங்கள் மற்றும் மனித கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெலிப்பனை – அளுத்கம – பொதுபிட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த விசேட அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள், குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

பாதாள குழுவின் உறுப்பினர் என கருதப்படும் கொஸ்கொட சுஜீ என்ற சந்தேக நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள துப்பாக்கி, ரிவால்வர், டி-56 ரக ரவைகள் ஐந்து, 9 மில்லிமீட்டர் ரவைகள் 10 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a comment