தெருக்கூத்து ஆடுவதனால் சமூகத்தை மாற்ற முடியாது – முத்துசிவலிங்கம்

200 0

தெருக்கூத்து ஆடுவதனால் சமூகத்தை மாற்ற முடியாது நிலையான திடமான தலைமைத்துவத்தின் மூலம் தான் சமூகத்திலும் தோட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்த முடியும்.

அண்மைக் காலத்தில் பல உறுதியான தலைவர்கள் இன்மையால் நாம் பல பின்னடைவுகளை சந்திக்திருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பொகவந்தலாவ பகுதியில் பொகவந்தலாவ தோட்டத்திற்கு செல்லும் புனரமைக்கப்பட்ட பாதை, டின்சின், கெம்பியன் ஆகிய ஆலயங்களுக்கு சிலைகள், விளையாட்டு உபகரணங்கள், அறநெறி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் போன்றன வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அன்று இந்திய பிரதமர் வந்த நேரம் நாங்கள் தனியாக சந்தித்து எங்கள் மக்களுக்கு இரண்டு லட்சம் வீடுகளை அமைத்து கிராமங்களாக மாற்றி தருமாறு கேட்ட போது அதற்கு அவர் ஏன் வீடு வழங்க வேண்டும் என்றார்.

அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பதிலளிக்கையில், உங்கள் அரசாங்கம் தான் எங்களை இங்கு அனுப்பியுள்ளது இந்திய அரசாங்கத்தினால் நாங்கள் எதனையும் பெறவில்லை.

டெல்லி எமது மக்களை இங்கு அனுப்பியதனால் தான் எம் மக்கள் அடிப்படை வசதி இன்றி திண்டாடுகிறார்கள்.

ஆகவே எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் எமது மக்கள் ஏதாவது செய்து பிழைத்து கொள்வார்கள்.

அத்தோடு மலையக மாணவர்களுக்கு உயர் கல்விக்கு விசேட புலமை பரிசில் திட்டம் ஒன்றினையும் அமுல்படுத்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

10000 வீடுகள் கட்டிக்கொடுக்க சம்மதித்ததுடன் சகல வசதிகளையும் கொண்ட பல்கலைகழகம் ஆசிரியர்களுக்கு பயிற்சி போன்றன செய்து கொடுக்க சம்மத்தித்தார்.

அன்று சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்தில் பாடசாலைக்கென்று இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டன. ஆனால் ஜனாதிபதி நிதி வழங்கியும் காணி இல்லாமையினால் அந்த நிதி திறை சேரிக்கு மீண்டும் சென்றுள்ளது.

Leave a comment