இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடரும் போப் பிரான்சிஸ்

391 0

201608090107517351_Pope-Francis-Tops-Three-Million-Instagram-Followers_SECVPFபோப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது.போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி தனது புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட 143 பதிவுகளை செய்துள்ளார். அதில் சில வசனங்கள் ஆங்கில மொழியிலும், மேலும் மொழிபெயர்க்கப்பட்ட பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

1.2 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது மூன்றாவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போப் பிரான்சிஸ் ஏற்கனவே பல்வேறு சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளார். டுவிட்டர் மூலம் தொடர்ச்சியாக மக்களிடையே பேசியும் வருகிறார்.