அதிபர் லலித் ஜயசிங்க பணியிலிருந்து இடை நீக்கம்

6248 0

விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடை நீக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஆணைக்குழு இந்த அனுமதியினை வழங்கியுள்ளது.

மாணவி வித்யா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார், கொழும்புக்கு தப்பிச் செல்வதற்கு காரணமாக இருந்தக் குற்றச்சாட்டில், அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த காவற்துறை அதிகாரியின் பதவியை இடை நீக்கம் செய்யுமாறு காவற்துறை மா அதிபர், காவற்துறை ஆணைகுழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைய, அவர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment