தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் கூறியது உண்மை – அன்புமணி ராமதாஸ்

461 0

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் கூறியது உண்மையே என பாட்;டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நீட் பிரச்சினையால் மோசமான சூழல் உள்ளது.
இந்த ஆண்டு 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் பாட திட்டத்தின் கீழ் தேர்வுகளை எழுதி உள்ளார்கள்.
16 ஆயிரம் மாணவர்கள்தான் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.
எனினும் நீட் தேர்வில் கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டது.
இதனால் இந்த ஆண்டு அரசிடம் உள்ள 3இ372 மருத்துவ இடங்களில் 3 ஆயிரம் இடங்கள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் கிடைக்கும். மற்ற இடங்கள் தான் சமச்சீர் பாட திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களுக்கு கிடைக்கும்.
இது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும்இ தமிழகத்துக்கும் செய்யப்பட்டு உள்ள அநீதி. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கும் மசோதாவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பி விரைவில் சட்டமாக கொண்டு வரவேண்டும்.
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மையே.
அவர் தவறாக சொல்கிறார் என்பதை ஏற்கமுடியாது எனவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment