இலங்கையின் முனைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு

394 0

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தில் இலங்கையின் ஜனாதிபதி கையெழுத்திட்டமையை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார்.

இந்த முனைப்பு, தமது உறவுகள் காணாமல் போனமை தொடர்பில் உண்மையை எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு முக்கியமான அம்சமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகளில் உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராகவுள்ளதாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளதாக அவரின் உதவி பேச்சாளர் பர்ஹான் ஹக் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்

Leave a comment