தொழிற்சங்க ரீதியாக தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒரணியாக செயல்படும்

290 0

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து ஒரே தொழிற்சங்கமாக செயற்படுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். 

அட்டன் எபோட்ஸிலி – ஆனைத் தோட்ட பிரிவில் ஏற்படுத்தபட உள்ள தனி வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 02 கோடி ருபாய் நிதியொதுக்கீட்டில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஆனைத் தோட்டத்தில் 20 வீடுகள் நீர்மாணிக்கபட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் உட்பட மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன்,எம்.ராம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் எஸ்.லோரன்ஸ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், உபதலைவர் ஜி.நகுலேஸ்வரன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பழனி திகாம்பரம் தொடர்ந்தும் பேசுகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியிள் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து மலையக தமிழ் சமுகத்துக்கு உறுதியான தலைமைத்துவத்தை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

அதேபோல தொழிற்சங்க கட்டமைப்பில் வெவ்வேறாக செயல்படுகின்ற நாம் எதிர்காலத்தில் ஒரே தொழிற்சங்கமாக செயற்படுவதற்கு ஆலோசித்து வருகிறோம் என குறிப்பிட்டார்.

Leave a comment