தமிழக போலீஸ் துறையில் மேலும் 3 டி.ஜி.பி.க்கள்

8843 0

தமிழக போலீஸ் துறையில் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பணியாற்றும் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.

அவர்களை டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு செய்யலாம் என்றும், அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றும் தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்ததும் அவர்கள் 3 பேருக்கும் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு உரிய பணி வழங்கப்படும்.

தமிழகத்தில் தற்போது அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் டி.ஜி.பி.க்களாக உள்ளனர். அர்ச்சனா ராமசுந்தரம் மத்திய அரசு பணியில் உள்ளார். ராதாகிருஷ்ணன் சிவில் சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக இருக்கிறார். இந்த மாதம் அவர் ஓய்வு பெறுகிறார்.

தீயணைப்பு துறை இயக்குனராக ஜார்ஜ் பணியாற்றுகிறார். அவர் செப்டம்பர் மாதம் ஓய்வுபெற இருக்கிறார். மகேந்திரன் போலீஸ் அகாடமியில் பணியாற்றுகிறார். ஏற்கனவே பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கொடுத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment