தமிழகத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: வங்கி, ஏ.டி.எம்.களில் புழக்கம் குறைந்தது

4595 0

கடந்த சில மாதங்களாவே தமிழகம் உள்பட சில மாநிலங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் ஏ.டி.எம்.களிலும் ரூ.2000 நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

உயர் மதிப்புள்ள ரூ.2000 நோட்டு நாடு முழுவதும் அதிகளவு அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டு இருந்தது. ஏ.டி.எம்.களில் ரூ.2000, ரூ.500, ரூ.100 ஆகிய நோட்டுகள் மட்டும் வினியோகிக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக புதிய 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் ரூ.2000 நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் உயர் மதிப்புள்ள ரூ.2000 நோட்டு புழக்கம் குறைக்கப்பட்டுள்ளது.பொருளாதார கொள்கையின் அடிப்படையில் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது உயர் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே பெறப்படுகிறது என்று ஸ்டேட் வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வங்கிகளுக்கு வெளியே ரூ.2000 நோட்டுகள் மறு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.வங்கிகளில் பெரிய வங்கியாக திகழும் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் கூட இன்னும் ஒரு சிலவற்றில் ரூ.2000 நோட்டு பெறக்கூடிய வசதி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் புதிய ரூ.2000 நோட்டு புழக்கம் குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு அனுப்பப்படும் 2000 ரூபாய் நோட்டு மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் முதல் ரூ.2000 நோட்டு வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் அதிகமாக வினியோகிக்கப்படுகிறது. புதிதாக 200 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றார்.நாடு முழுவதும் ஏ.டி.எம்.களில் சுமார் ரூ.60 லட்சம் 2000 நோட்டுகள் வைக்கப்படும். தற்போது அவை ரூ.22 லட்சம் நோட்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு 93 சதவீத நோட்டுகள் ஏ.டி.எம்.கள் மூலம் புழக்கத்தில் விடப்படும். இப்போது அவை 90 சதவீதமாக குறைந்துள்ளது.

பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாதவைகளாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு ரூ.17 லட்சம் கோடி புழக்கத்தில் விடப்பட்டு இருந்தது.பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு 14.5 லட்சம் கோடி புழக்கத்தில் இருக்கின்றன என்று ரிசர்வ் வங்கி ஆதாரம் மூலம் தெரிய வருகிறது.

Leave a comment