உள்ளுராட்சி தேர்தலில் மலையகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

343 0

இன்று உலகில் நாடுகளில் பெண்களின் அரசியல் பிரவேசத்தில் இலங்கை 179 ஆம் இடத்தில் இருகின்றது. 

உலக நாடுகளில் பெண் தலைவர்கள் அதிகமாக இருகின்றார்கள். காரணம் பெண்களின் அரசியல் பிரவேசம் மேற்பட்டுள்ளது. இலங்கையிலும் இந்த நிலை உருவாக வேண்டும். இலங்கையை பொருத்த வரையில் ஆசிரியர் தொழிலில் 75 வீதமான பெண்கள் பணியாற்றுகின்றனர்.

அதேபோல், அரச சேவையில் 75 வீதமான பெண்கள் சேவை புரிகின்றனர். மலைய தோட்ட தொழிலாளர்களில் பெண்களே அதிகம் உழைக்கின்றனர்¸ இலங்கைக்கு அதிக அளவிலான வெளிநாட்டு வருமானத்தை பெற்று தருபவர்களும் பெண்கள்தான் என்றால் மிகையாகாது.

சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரிபவர்களில் அனேகமானோர் பெண்களாவர். இந்த நிலையில் இலங்கையில் பெண்களின் அரசியல் பிரவேசம் குறைவாக இருக்கின்றது இதனை அதிகரிக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். இலங்கையில் பெண்களுக்கு அரசியல் அந்தஸ்த்து கொடுப்பது குறைவாகவே இருக்கின்றது.

அதனால் தான் நவம்பர் மாதம் வர இருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பெண்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிக்கும் அதே நேரத்தில் மலையத்தில் பெண்களுக்கும் வாய்ப்புகளை வழங்க இருக்கின்றோம் என்று ராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

Leave a comment