அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்கு 2 கைகள் இணைப்பு

15272 0

அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சை மூலம் 10 வயது சிறுவனுக்கு 2 கைகள் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை பிலாடெல்பிபாலன் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர் சான்ட்ரா அமரால் தலைமையிலான குழுவினர் செய்தனர்.

அமெரிக்காவில் பிலா டெல்பியாவை சேர்ந்த 10 வயது சிறுவன் ஷியோன் ஹார்வி. இவன் 2 வயது ஆக இருக்கும் போது நோய்வாய்ப்பட்டான் எனவே அவனது 2 கைகள் மணிக்கட்டுக்கு கீழும் 2 கால்கள் முழங்காலுக்கு கீழும் அகற்றப்பட்டன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பால்டிமோரின் இறந்தவரிடம் இருந்து தானம் பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவனுக்கு 2 கைகளும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை பிலாடெல்பிபாலன் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர் சான்ட்ரா அமரால் தலைமையிலான குழுவினர் செய்தனர்.

அதை தொடர்ந்த தீவிர சிகிச்சைக்கு பின் அவனுக்கு டாக்டர்கள் பயிற்சி அளித்தனர். தற்போது அவன் மற்றவர்களை போல சாதாரணமாக செயல்பட தொடங்கிவிட்டான்.

தற்போது அவன் தானம் பெற்று பொருத்தப்பட்ட கைகளால் நன்றாக எழுதுகிறான். பேஸ்பால் விளையாடுகிறான். தானாகவே கைகளால் சாப்பிடுகிறான்.

இதனால் பெற்றோரும், டாக்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட அவனது கைகளை மூளை ஏற்று கொண்டு விட்டது. அதனால் தான் அவனால் சகஜமாக செயல்பட முடிகிறது. என்றான். இவன் 4 வயது இருக்கும் போது சிறுநீரக கோளாறு எற்பட்டது. 2 வருடம் டாயாலிசிஸ் செய்த அவன் பின்னர் தனது தாயார் பட்டி ரேயிடம் இருந்து சிறுநீரகம் தானமாக பெற்றான்.

Leave a comment