அமெரிக்காவில் விமானத்தில் இருந்து குதித்து பாராசூட் வீரர் தற்கொலை

436 0

அமெரிக்காவில் விமானத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் தெரியவில்லை.

இத்தாலியை சேர்ந்த பாராசூட் வீரர் விதான் டோனியோ கபோடோர்டோ (27). இவர் பாராசூட்டில் இருந்து குதிப்பதில் மிகுந்த அனுபவம் மிக்கவர். 600 தடவை பாராசூட்டில் இருந்து குதித்து இருக்கிறார்.

சம்பவத்தன்று அமெரிக்காவில் புளோரிடாவில் 13,500 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தார். முன்னதாக விமானத்தில் பறந்தபடி தனது மனைவிக்கு ஒரு தகவல் அனுப்பினார்.

அதில் நான் விமானத்தில் இருந்து குதிக்கும் போது பாராசூட்டை விரிக்கப் போவதில்லை என தெரிவித்து இருந்தார்.

உடனே பதறிய அவரது 25 வயது மனைவி புளோரிடாவில் உள்ள பாராசூட் மையத்துக்கு ஓடோடி வந்தார். தனது கணவரை குதிக்காமல் தடுத்து நிறுத்தும்படி கெஞ்சினார். அது குறித்து விமானிக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர்.

அதற்குள் அவர் விமானத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் தெரியவில்லை.

கணவன், மனைவி இருவரும் யுனைடெட் டெக்னாலஜி நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.

Leave a comment